வணக்கம் நண்பர்களே! 🙏
இது உங்கள் Gowtham 360.
நான் எப்பவுமே நம்ம வாடிக்கையாளர்களுக்கு உண்மையான விஷயங்களை சொல்லவேணும்ங்கர மனசோடதான் வரேன்.
இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசப்போறேன்.
இது அதிர்ச்சிலும் அதிர்ச்சி!!
நமக்கு எல்லாருக்குமே மிக மிக பிடித்த ஒரு ஈவினிங் ஸ்னாக்… பத்தி தான் பேச போறேன்.
ரோட்டு கடையில மாலை நேரங்கள்ல மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்கி சாப்பிடுற ஒன்னு..
அதுதான்..
🚩 சிக்கன் பக்கோடா / சிக்கன் 65 / சில்லி சிக்கன்!
மாலை நேரம் ஆனா போதும்…
ரோட்டோர கடையில கொட்டிக்கிடக்கும் கூட்டம்!
நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் போட்டி போட்டு வாங்குறது தான் இந்த சில்லி சிக்கன்!
சுட சுட 1/4 கிலோ சில்லி சிக்கன் வாங்கி, நண்பர்களோட சிரிச்சு பேசிக்கிட்டு, சாப்பிடுற அந்த அனுபவமே வேற மாதிரி!
சிக்கன் லெக் பீஸ், பொரிச்ச ஈரல், பொரிச்ச தலை என விதவிதமாக சாப்பிடுவோம்.
அதில் இருக்கிற சுவை சும்மா நம்மளை சுண்டி இழுக்கும்...
ஆனா…
அந்த சுவைக்கு பின்னால இருக்குற பாதிப்பு பற்றி யோசிச்சு பாத்தீங்களா?
---
🛢️ எண்ணெயா? விஷமா?
பொதுவாவே இந்த ரோட்டு கடைகள்ல சிக்கன் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய்யை 4-5 நாட்களுக்கு மேலாக பயன்படுத்துறாங்க.
அந்த எண்ணெய் குறைய குறைய மட்டுமே புது எண்ணைகள் சேர்க்கப்படுகின்றன..
இதுதான் வழக்கம்.
அப்படி அவங்க அந்த எண்ணெய பயன்படுத்துறதால..
அந்த பாழான எண்ணெய்ல இருந்து "Acrylamide" என்ற ஒரு ரசாயன பொருள் உருவாகுது.
இது என்னனா – புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று WHO – உலக சுகாதார நிறுவனம் சொல்லுது!
எண்ணெய் கருப்பா நிறத்தில் இருந்தாலோ, பொரிக்கும்போது அதிகப்படியான நுரை பொங்கினாலோ அது பழைய எண்ணைய் தான்னு நீங்க புரிஞ்சுக்கணும்..
🧂MSG – சுவையின் ரகசியம்!
அடுத்ததா, சிக்கன் சுவையா இருக்கணும், வாசனை வரணும், நாம்ப வாங்கி ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும்னு சில்லி கடைக்காரர் MSG (Monosodium Glutamate) கலக்குறாங்க.
இது என்ன பண்ணும் தெரியுமா?
தலைவலி
மயக்கம்
உடல் சூடு
நரம்பு ரீதியான பிரச்சனைகள்
எல்லாம் வரச்செய்யும். சில பேர்களுக்கு உடனே allergy மாதிரி ரியாக்ஷனும் வரும்.
---
🦠நுண்ணுயிரிகளின் தாக்கம் – எச்சரிக்கையாக இருங்கள்!
முறைப்படி சுத்தம் இல்லாத சிக்கன்ல, தரமற்ற கறி மற்றும் பழைய கறில
E.coli, Salmonella, Listeria மாதிரியான நுண்ணுயிரிகள் இருக்கலாம்.
இதெல்லாம் நம்ம உடம்புக்குள்ள வந்தா,
வயிறு போயிடும், வாந்தி, டயரியா…
சரியான டிரீட்மெண்ட் இல்லனா நேரா மருத்துவமனை தான்!
சிக்கன் பக்கோடா பார்சல்
நாம கடைகள்ல கால் கிலோ சில்லி வாங்கி சாப்பிட்டு வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் பெரியவுங்களுக்கும் சில்லி பார்சல் வாங்கிட்டு போறோம்.
வீட்டுக்கு வந்ததும் அந்த பார்சலை திறந்து பார்த்தீங்க அப்படின்னா அந்த சில்லி சிக்கன், தண்ணி விட்டு ஈரமா கொலை கொலன்னு இருக்கும்.
இதுக்கு என்ன காரணம்னு நீங்க யோசிச்சு இருக்கீங்களா?
கறியின் தரம் மற்றும் அதில் சேர்க்கப்படும் மசாலாக்களும் அதில் சேர்க்கப்படும் ரசாயனம் மற்றும் பொறிக்கப்படும் எண்ணெய் தான் காரணம்.
இதை வீட்டில் இருக்கும் குழந்தைகள் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும் உடல் சத்து குறைபாடு ஏற்படும்.
பெரியவர்கள் சாப்பிடும் பொழுதும் இதே நிலைமை ஏற்படும் ஆனால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
---
🍗 சிக்கன் சாப்பிடாதீங்கன்னு சொல்லல... ஆனா...
ஆனா இது மாதிரி சுகாதாரமில்லாத முறையில் சாப்பிடுறதால,
தினம் தினம் நம்ம உடம்புல நச்சுகள் சேருது.
"சுவைக்கு அடிமை ஆனா உடம்பே இல்லாத பாட்டை படும்!"
நாம குடுக்குற ஒரு நூறு ரூபாய் காகலாம்.. கடைக்காரன் நல்ல முறையில நமக்கு சில்லி பொறிச்சு தர மாட்டாங்க!
ரோட்டோரமா வாகனங்கள் போய் வர , வாகனபுகை சூழ திறந்த வெளியில் தான் அவர்கள் சில்லி பொறிச்சி கொடுக்கிறாங்க!
அவங்க அப்படி தரமற்ற முறையில அந்த சில்லி பொறிச்சு கொடுக்கறதுனால தான் அந்த மலிவு விலை..
அதை நீங்க புரிஞ்சுக்கணும்!
இது அவங்க மேல தப்பில்ல....
---
✅ பாதுகாப்பான வழி — வீட்டில சிக்கன் செய்றது!
நீங்க வீட்டிலவே நல்ல எண்ணெய்யுல, சுத்தமா, சுவையா சிக்கன் வறுத்து சாப்பிடலாம். பாதிப்பு இல்லாம இருக்கும்…
நம்மல நாமதான் ஆரோக்கியமா பாதுகாக்கணும்.
---
நண்பர்களே,
நீங்க எல்லாம் நல்லதுக்காகதான் சாப்பிடறீங்க…
ஆனா எந்த சாப்பாடும் நம்ம உடம்புக்கு நன்மை தரணும்…
நம்ம வாழ்க்கைக்கு சுவை மட்டும் போதாது – ஆரோக்கியமும் அவசியம்!
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தா,
மற்றவர்களுக்கும் பகிருங்க, அவங்களையும் பாதுகாக்குங்க.
நன்றி!
இது உங்கள் Gowtham 360. சந்திப்போம் அடுத்த தகவலில்! 🙏
👇 இந்த வீடியோவை இங்கே பாருங்க:
🔗 YouTube லிங்க்:
கருத்துகள்
கருத்துரையிடுக