காலை பொழுது விடிந்ததும் அனைவரது வீட்டிலும் முதலில் செய்து தரப்படும் ஒரு பானம் டீ காபி.
அதிகாலை எழுந்தவுடன் டீ காபி குடிப்பது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. ஆனால் ஒரே ஒரு கேள்வி தான்:
ஏன் அந்த டீ காபி அவ்வளவு அவசியமா?
அது உண்மையிலேயே நமக்கு சக்தி தருமா? ஆரோக்கியம் தருமா?
🥛 வெறும் வயிற்றில் பால், டீ தூள், சர்க்கரை... நல்லதா?
இப்போது பெரும்பாலான வீடுகளில் பாக்கெட் பால் தான் வாங்குகிறார்கள். அதேபோல், சர்க்கரையும் , டீ தூளும் கடையில் வாங்குகிறார்கள்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து, சுண்டக் காய்ச்சி காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கள்கிறார்கள்.
இப்படி இந்த கலவை (பால், சர்க்கரை, டீ தூள்) சுடச்சுட வயிற்றுக்குள் செல்லும் போது, அது உண்மையில் நமக்கு சக்தியோ நன்மையோ தருவதில்லை. மாறாக, உடலுக்கு வியாதி, மன அழுத்தம், அடிமைத்தனம் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
💸 உங்கள் டீ காபிக்காண செலவுகளை கணக்கில் வையுங்கள்!
ஒரு நாளைக்கு பால், டீ தூள், சர்க்கரை வாங்கும் செலவு எவ்வளவு?
அதை காய்ச்ச பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு ஆகும் செலவு எவ்வளவு?
மாதம் முழுக்க இந்த டீ காபி செய்வதற்கான செலவு எவ்வளவு?
உடலுக்கு நன்மை இல்லாத ஒரு பழக்கத்திற்காக நாம் எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை கணக்கிடுங்கள்!
☠️ டீ காபி குடிப்பதால் உண்மையில் என்ன நடக்கிறது?
பாலில் கொழுப்புச்சத்து உள்ளது.
சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிப்பொருள் உள்ளது.
டீ காபி தூளில் கபீன் (Caffeine) உள்ளது.
இது உடலுக்கு சில நேரங்களில் சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது போல் தோன்றலாம். ஆனால் அதுவே:
தூக்கமின்மை
தலைவலி
மனஅழுத்தம்
பித்தக்கோபம்
எலும்புத்தசை வலி
குடல் பிரச்சனை
சர்க்கரை நோய்
அல்சர்
மூட்டு வலி
போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்த மாதிரியான உடல் பாதிப்பின் போது மருத்துவரை அணுகினால் அவர் நம்மிடம் கூறுவது ஒன்றே தான்!
“டீ காபி குடிக்காதீர்கள்.”
அது ஒரு மருத்துவ ஆலோசனை. ஆனால் நாம் அதை நேர்த்தியாக கடைப்பிடிக்க மறுக்கிறோம்.
🔗 டீ காபிக்கு அடிமையா நாமும்?
மதுப்பழக்கத்திறகு அடிமையான ஒவ்வொரு குடிகாரனும் சொல்வது:
மது குடிச்சா தான் என்னால சுறுசுறுப்பா இருக்க முடியும்!
மது இல்லன்னா என்னால வேலையே செய்ய முடியாது!
வேலை செஞ்சு உடம்பு வலிக்குது, மது குடிச்சா தான் எனக்கு சரியா இருக்கும்!
என்பதைப் போல தான் டீ காபி குடிப்பவர்களும் அதற்கு அடிமையாகி அதே மாதிரி சொல்கிறார்கள்!
எனக்கு டீ காபி குடிச்சா தான் சுறுசுறுப்பா இருக்க முடியும்!
டீ காபி இல்லையென்றால் என்னால வேலையே செய்ய முடியாது!
இதுதான் அடிமைத்தனத்தின் உச்ச கட்டம்.
இவற்றைக் குடிப்பதால் உங்களுக்கு சுறுசுறுப்போ சக்தியோ கிடைப்பதில்லை நீங்கள் அதை நம்புகிறீர்கள் உங்கள் மனம் அதை ஏற்கிறது தவிர அதில் எந்தவித சுறுசுறுப்பும் சக்தியும் தருவதில்லை.
அதில் இருக்கும் இனிப்பு சுவையும் அதில் இருக்கும் டீ காபி தூளின் மனமும்தான் உங்களை குடிக்க வைக்கிறது.
நீங்கள் இதை சிந்தித்துப் பாருங்கள்!
உங்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டீ, காபி கொடுக்கப்பட்டு உங்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை என்றால், உங்களுக்கு ஆத்திரமும் சோர்வும் தவிப்பும் ஏற்படும்.
எப்படியாவது டீ காபி வைத்து குடித்து விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றும்.
அதுதான் அடிமைத்தனத்தின் உச்சகட்டம்!
அது ஒரு சாதாரண டீ காபி அதற்கு ஏன் நாம் மனதளவில் காயமடையும் அளவிற்கு செல்ல வேண்டும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
டீ காபி குடிப்பதில் இருக்கும் தவறான பழக்கங்கள்:
இரவு வைத்த பழைய டீ காபியை மறுநாள் சுட வைத்து குடிப்பது
கழுவாத பாத்திரத்தில் டீ வைத்துக் குடிப்பது
வெயிலில், வெறும் வயிற்றில், மீண்டும் மீண்டும் டீ காபி குடிப்பது
ஒரு நாளைக்கு 5-6 முறை டீ வைத்து குடிப்பது
டீயுடன் கார உணவுகள் (பஜ்ஜி, போண்டா, சமோசா) சேர்த்து சாப்பிடுவது
இவை எல்லாம் உங்கள் உடலை தீவிரமாகவும் பாதிக்கின்றன.
🍃 மாற்று வழிகள் – எளிதாகவும் ஆரோக்கியமாகவும்
அதிகாலை எழுந்தவுடன்…
✅ ஒரு சொம்பு வெறும் தண்ணீர் குடியுங்கள்
✅ மூலிகை பானம் (துளசி, கற்பூரவள்ளி, கஸ்தூரி மஞ்சள்)
✅ அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ்
✅ பசிக்குமானால் சாதம் வடித்து சாப்பிடுங்கள்
இவை உங்கள் உடலை சுறுசுறுப்பாகவும், நலமடையவும் செய்யும் உண்மையான வழிகள்.
---
🔚 முடிவாக...
நம்மால் காபி டீ குடிப்பதை நிறுத்த முடியாது என்று சொல்லிவிட்டு அதை அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தில் வைத்துக்கொள்வது தவறு.
அருந்துவதற்கு பதில், ஆராயுங்கள்.
அடிமையிலிருந்து விடுபடுங்கள்.
ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துங்கள்.
காலை நல்ல முறையில் தொடங்குங்கள் – உங்கள் வாழ்க்கையும் நல்லதாயிருக்கும்.
நன்றி. வணக்கம்!
கருத்துகள்
கருத்துரையிடுக